/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திருப்பூர் அணிக்கு முதல் வெற்றி: மதுரை அணி ஏமாற்றம்
/
திருப்பூர் அணிக்கு முதல் வெற்றி: மதுரை அணி ஏமாற்றம்
திருப்பூர் அணிக்கு முதல் வெற்றி: மதுரை அணி ஏமாற்றம்
திருப்பூர் அணிக்கு முதல் வெற்றி: மதுரை அணி ஏமாற்றம்
ADDED : ஜூலை 14, 2024 12:17 AM

கோவை: பாலசந்தர் அனிருத் அரைசதம் விளாச திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது. திருப்பூர் அணிக்கு முதல் வெற்றிகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மதுரை, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
மதுரை அணிக்கு லோகேஸ்வர் (4), அஜய் சேட்டன் (3) ஏமாற்றினர். ஹரிநிஷாந்த் (17), ஸ்ரீ அபிசேக் (21), ஜெகதீசன் கவுசிக் (28) ஓரளவு கைகொடுத்தனர். புவனேஸ்வரன், அஜித் ராம் பந்தில் சிக்சர் விளாசிய உதிரசாமி சசிதேவ் 19 பந்தில் 41 ரன் (4 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. ஸ்வப்னில் சிங் (17), கிரண் ஆகாஷ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். திருப்பூர் அணி சார்பில் அஜித் ராம் 3, ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட் கைப்பற்றினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன் (6), துசார் ரஹேஜா (3) சோபிக்கவில்லை. பின் இணைந்த அமித் சாத்விக், அனிருத் சீதாராம் நம்பிக்கை அளித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது முருகன் அஷ்வின் பந்தில் சாத்விக் (23) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய முருகன் அஷ்வின் பந்தில் கணேசன் (10) 'பெவிலியன்' திரும்பினார். அபாரமாக ஆடிய அனிருத் சீதாராம் 28 பந்தில் 52 ரன் (3 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய முகமது அலி (33*), கேப்டன் சாய் கிஷோர் (16) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.