/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோவா கேப்டன் ஜெய்ஸ்வால்: மும்பையில் இருந்து விலகல்
/
கோவா கேப்டன் ஜெய்ஸ்வால்: மும்பையில் இருந்து விலகல்
கோவா கேப்டன் ஜெய்ஸ்வால்: மும்பையில் இருந்து விலகல்
கோவா கேப்டன் ஜெய்ஸ்வால்: மும்பையில் இருந்து விலகல்
ADDED : ஏப் 02, 2025 10:19 PM

மும்பை: இளம் வீரர் ஜெய்ஸ்வால், மும்பை அணியில் இருந்து விலக உள்ளார்.
இந்திய அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 23. உ.பி.,யை சேர்ந்த இவர், 2018 முதல் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் (ஜன. 23-25) மும்பை அணிக்காக விளையாடிய இவர் (4, 26 ரன்) சோபிக்கவில்லை.
இந்நிலையில் சொந்த காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து விலகி, கோவா அணியில் இணைய முடிவு செய்தார் ஜெய்ஸ்வால். இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (எம்.சி.ஏ.) விண்ணப்பித்தார். இதற்கு எம்.சி.ஏ., அனுமதி வழங்கியது. இதனையடுத்து 2025-26 சீசனில் கோவா அணிக்காக விளையாட உள்ளார்.
மும்பை அணியில் இருந்து விலகி, கோவா அணியில் இணையும் 3வது வீரராகிறார் ஜெய்ஸ்வால். ஏற்கனவே 2022-23 சீசனில் சச்சின் மகன் அர்ஜுன், சித்தேஷ் லத், கோவா அணியில் இணைந்தனர்.
கோவா கிரிக்கெட் சங்க செயலர் ஷம்பா தேசாய் கூறுகையில், ''கோவா அணிக்காக விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா அணிக்காக விளையாடி வரும் இவர், கேப்டனாக நியமிக்கப்படலாம்,'' என்றார்.

