/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'பிளே-ஆப்' சுற்றில் குஜராத்: சுதர்சன் சதம் விளாசல்
/
'பிளே-ஆப்' சுற்றில் குஜராத்: சுதர்சன் சதம் விளாசல்
'பிளே-ஆப்' சுற்றில் குஜராத்: சுதர்சன் சதம் விளாசல்
'பிளே-ஆப்' சுற்றில் குஜராத்: சுதர்சன் சதம் விளாசல்
ADDED : மே 19, 2025 12:21 AM

புதுடில்லி: சாய் சுதர்சன் சதம் கடந்து கைகொடுக்க, 10 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்ற குஜராத் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
ராகுல் சதம்: டில்லி அணிக்கு டுபிளசி (5) ஏமாற்றினார். ரபாடா வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய லோகேஷ் ராகுல், ரஷித் கான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 35 பந்தில் அரைசதம் கடந்தார். அபிஷேக் போரெல் (30), கேப்டன் அக்சர் படேல் (25) ஓரளவு கைகொடுத்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், பிரிமியர் லீக் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.டில்லி அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது. ராகுல் (112 ரன், 4 சிக்சர், 14 பவுண்டரி), ஸ்டப்ஸ் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
சூப்பர் சுப்மன்: சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. நடராஜன் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய சுதர்சன், அக்சர் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 30 பந்தில் அரைசதம் கடந்தார். துஷ்மந்தா சமீரா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுப்மன் கில், தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இவர்களை பிரிக்க முடியாமல் டில்லி அணி பவுலர்கள் திணறினர்.
சுதர்சன் அபாரம்: குல்தீப் யாதவ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சுதர்சன், பிரிமியர் லீக் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய சுதர்சன், விப்ராஜ் நிகம் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணி 19 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 205 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுதர்சன் (108* ரன், 4 சிக்சர், 12 பவுண்டரி), சுப்மன் (93* ரன், 7 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
சிறந்த வெற்றி
குஜராத் அணி முதன்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிமியர் லீக் அரங்கில், இதுவரை 16 போட்டிகளில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பதிவாகின. பெங்களூரு அணி அதிகபட்சமாக 4 முறை இப்படி வென்றது.
5 சதம்
பிரிமியர் லீக் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 4வது இடம் பிடித்தார் ராகுல். இதுவரை 5 சதம் அடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் கோலி (8 சதம்), பட்லர் (7), கெய்ல் (6) உள்ளனர்.
* 'டி-20' அரங்கில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் 3வது இடத்தை அபிஷேக் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார் ராகுல். இருவரும் தலா 7 சதம் விளாசினர். முதலிரண்டு இடங்களில் கோலி (9 சதம்), ரோகித் (8) உள்ளனர்.
8000 ரன்
'டி-20' அரங்கில் குறைந்த இன்னிங்சில் 8000 ரன் எட்டிய வீரர்கள் வரிசையில் 3வது இடம் பிடித்தார் ராகுல். இவர், 224 இன்னிங்சில், 8079 ரன் எடுத்துள்ளார். முதலிரண்டு இடங்களில் கெய்ல் (213 இன்னிங்ஸ்), பாபர் ஆசம் (218) உள்ளனர்.