/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
குஜராத் அணி 'ஹாட்ரிக்' தோல்வி: உ.பி.,யிடம் வீழ்ந்தது
/
குஜராத் அணி 'ஹாட்ரிக்' தோல்வி: உ.பி.,யிடம் வீழ்ந்தது
குஜராத் அணி 'ஹாட்ரிக்' தோல்வி: உ.பி.,யிடம் வீழ்ந்தது
குஜராத் அணி 'ஹாட்ரிக்' தோல்வி: உ.பி.,யிடம் வீழ்ந்தது
ADDED : மார் 01, 2024 10:29 PM

பெங்களூரு: பிரிமியர் லீக் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி., அணியிடம் வீழ்ந்தது. ஏற்கனவே மும்பை, பெங்களூருவிடம் ஏமாற்றிய குஜராத் அணி 'ஹாட்ரிக்' தோல்வியடைந்தது.
இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் குஜராத், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி கேப்டன் அலிசா ஹீலி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
குஜராத் அணிக்கு லாரா வால்வார்ட், கேப்டன் பெத் மூனே ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது சோபி எக்லெஸ்டோன் 'சுழலில்' மூனே (16) சிக்கினார். தொடர்ந்து அசத்திய எக்லெஸ்டோன் பந்தில் வால்வார்ட் (28) அவுட்டானார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் (18) சோபிக்கவில்லை.
பின் இணைந்த லிட்ச்பீல்டு, ஆஷ்லி கார்ட்னர் ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது எக்லெஸ்டோன் பந்தில் கார்ட்னர் (30) ஆட்டமிழந்தார். லிட்ச்பீல்டு (35) 'ரன்-அவுட்' ஆனார். குஜராத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது. ஹேமலதா (2), பிரைஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். உ.பி., அணி சார்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய உ.பி., அணிக்கு கிரண் நவ்கிரே (12) சோபிக்கவில்லை. கேப்டன் அலிசா ஹீலி (33) ஓரளவு கைகொடுத்தார். சாமரி அதபத்து (17) நிலைக்கவில்லை. மேக்னா சிங் பந்தில் ஷ்வேதா ஷெராவத் (2) போல்டானார். அபாரமாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.
உ.பி., அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கிரேஸ் ஹாரிஸ் (60 ரன், 2 சிக்சர், 9 பவுண்டரி, 33 பந்து), தீப்தி சர்மா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

