ADDED : பிப் 26, 2024 06:51 PM

நவி மும்பை: கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா மீண்டும் போட்டிக்கு திரும்பினார்.
இந்திய 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா 30. கடந்த ஆண்டு அக். 29ல் புனேயில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் கணுக்காலில் காயமடைந்தார். அதன்பின் எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை. சமீபத்தில் ஐ.பி.எல்., 17வது சீசனுக்கான மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகும் விதமாக மும்பையில் நடக்கும் டி.ஒய். பாட்டீல் 'டி-20' 18வது சீசனில் பங்கேற்கிறார். நேற்று நவி மும்பையில் நடந்த பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிரான போட்டியில் ரிலயன்ஸ் ஒன் அணி சார்பில் விளையாடிய பாண்ட்யா 3 ஓவரில் 22 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். பேட்டிங்கில் 4 பந்தில் 3 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்த இவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இத்தொடரில் பாண்ட்யாவை தவிர இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகின்றனர்.
