தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஐ.சி.சி., கனவு அணியில் ஹர்மன்பிரீத் கவுர்

ஐ.சி.சி., கனவு அணியில் ஹர்மன்பிரீத் கவுர்

ஐ.சி.சி., கனவு அணியில் ஹர்மன்பிரீத் கவுர்


ADDED : அக் 21, 2024 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: 'டி-20' உலக கோப்பை கனவு அணிக்கு இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடந்தது. துபாயில் நடந்த பைனலில் நியூசிலாந்து அணி 32 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நியூசிலாந்து அணிக்கு கோப்பையுடன் ரூ. 19.6 கோடி பரிசு வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ. 9.8 கோடி பரிசு கிடைத்தது.

இத்தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை கொண்டு கனவு அணி ஒன்றை ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் இடம் பெற்றுள்ளார். இத்தொடரில் 4 போட்டியில், 2 அரைசதம் உட்பட 150 ரன் குவித்த இவர், அதிக ரன் எடுத்த இந்திய வீராங்கனையானார்.

நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா சார்பில் தலா 3 பேர் தேர்வாகினர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 2, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் அணியில் இருந்து தலா ஒரு வீராங்கனை இடம் பிடித்தனர்.

'லெவன்' அணி: லாரா வுல்வார்ட் (கேப்டன், தென் ஆப்ரிக்கா), டஸ்மின் பிரிட்ஸ் (தெ.ஆப்.,), டேனி வியாட்-ஹாட்ஜ் (இங்கிலாந்து), அமேலியா கெர் (நியூசி.,), ஹர்மன்பிரீத் கவுர் (இந்தியா), டீன்டிரா டாட்டின் (வெ.இண்டீஸ்), நிகர் சுல்தானா (வங்கம், விக்கெட் கீப்பர்), அபி பிளட்சர் (வெ.இண்டீஸ்), ரோஸ்மேரி (நியூசி.,), மலாபா (தெ.ஆப்.,), மேகன் ஷட் (ஆஸி.,). 12வது வீராங்கனை: ஈடன் கார்சன் (நியூசி.,).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us