ADDED : பிப் 09, 2026 11:23 PM

மும்பை: இந்திய அணியின் 'ஆல் ரவுண்டர்' ஹர்ஷித் ராணா 24. வேகப்பந்து வீச்சு மட்டுமன்றி, எந்த இடத்தில் களமிறங்கிய பேட்டிங் செய்து, அணிக்கு தேவையான ரன் எடுத்து உதவும் வீரராக இருந்தார். பயிற்சியாளர் காம்பிர், கேப்டன் சூர்யகுமார் வருகைக்குப்பின் இந்திய அணியில் 'ரெகுலராக' விளையாடினார்.
'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பந்துவீசினார். அப்போது வலது முழங்காலில் காயம் ஏற்பட, உலக கோப்பை தொடரில் இருந்து விலக நேரிட்டது. இவருக்குப் பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார்.
தற்போது ஹர்ஷித் ராணாவுக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட செய்தியில்,' முழங்கால் ஆப்பரேஷன் முடிந்தது. எனக்குப் பிடித்ததை மீண்டும் பெறுவதற்கு, கவனம் செலுத்தப் போகிறேன்,' என தெரிவித்துள்ளார்.
ஹர்ஷித் ராணா முழுமையாக குணமடைய குறைந்தது 45 நாள் தேவைப்படும் என்பதால், பிரிமியர் கிரிக்கெட் தொடரின், முதற்கட்ட போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

