தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி

தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி

தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி

2


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 09:36 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: பெண்களுக்கான ‘டி–20’ தொடரில் தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ‘சீனியர்’ பெண்கள் அணிகளுக்கான உள்ளூர் ‘டி–20’ தொடர் நடக்கிறது. மொத்தம் 31 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன. லக்னோவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சிக்கிம் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று தமிழக அணி கேப்டன் அனுஷா, பீல்டிங் தேர்வு செய்தார். சிக்கிம் அணிக்கு சமயிதா (15), பிரீத்திகா (36) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆஷ்னா 14 ரன் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. சிக்கிம் அணி 20 ஓவரில் 83/9 ரன் மட்டும் எடுத்தது. தமிழகத்தின் சார்பில் ரோஷினி, ஸ்ரீநிதி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

தமிழக அணிக்கு சுபாஹரிணி (1), ஹேமலதா ஜோடி துவக்கம் தந்தது. கமலினி 9 பந்தில் 21 ரன் எடுத்தார். அடுத்து ஹேமலதா (37), ஆர்ஷி (23) இணைந்து அவுட்டாகாமல், அணியை வெற்றி பெறச் செய்தனர். தமிழக அணி 10.2 ஓவரில் 84/2 எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே பஞ்சாப், திரிபுராவை வென்ற தமிழக அணி, இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. 12 புள்ளியுடன், பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us