sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஹேசல்வுட் 'வேகம்'... ஆஸ்திரேலியா அபாரம்

/

ஹேசல்வுட் 'வேகம்'... ஆஸ்திரேலியா அபாரம்

ஹேசல்வுட் 'வேகம்'... ஆஸ்திரேலியா அபாரம்

ஹேசல்வுட் 'வேகம்'... ஆஸ்திரேலியா அபாரம்


ADDED : மார் 08, 2024 09:24 PM

Google News

ADDED : மார் 08, 2024 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிறைஸ்ட்சர்ச்: இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட், 'வேகத்தில்' சரிந்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது.

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. கிறைஸ்ட்சர்ச்சில் 2வது டெஸ்ட் துவங்கியது. இது, நியூசிலாந்தின் வில்லியம்சன், சவுத்தீ பங்கேற்கும் 100வது டெஸ்ட் ஆனது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

ஹேசல்வுட் அசத்தல்

நியூசிலாந்து அணிக்கு வில் யங் (14) ஏமாற்றினார். டாம் லதாம் (38) ஓரளவு கைகொடுத்தார். ஹேசல்வுட் 'வேகத்தில்' ரச்சின் ரவிந்திரா (4), டேரில் மிட்சல் (4), கேன் வில்லியம்சன் (17) வெளியேறினர். ஸ்டார்க் பந்தில் பிலிப்ஸ் (2), ஸ்காட் (0) அவுட்டாகினர். டாம் பிளன்டெல் (22), மாட் ஹென்றி (29), கேப்டன் டிம் சவுத்தீ (26) ஆறுதல் தந்தனர்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 5, ஸ்டார்க் 3 விக்கெட் சாய்த்தனர்.

ஹென்றி நம்பிக்கை

பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (11), உஸ்மான் கவாஜா (16) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. மாட் ஹென்றி 'வேகத்தில்' கிரீன் (25), டிராவிஸ் ஹெட் (21) அவுட்டாகினர்.

ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்திருந்தது. லபுசேன் (45), லியான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஹென்றி 3 விக்கெட் கைப்பற்றினார்.

subboxhd@@357 விக்கெட்

மூன்று விக்கெட் சாய்த்த மிட்சல் ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலிய பவுலர்கள் பட்டியலில் டெனிஸ் லில்லியை (355 விக்கெட்) முந்தி 4வது இடம் பிடித்தார். ஸ்டார்க் 89 டெஸ்டில், 357 விக்கெட் வீழ்த்தி உள்ளார். முதல் மூன்று இடங்களில் வார்ன் (708 விக்கெட்), மெக்ராத் (563), லியான் (527) உள்ளனர்.








      Dinamalar
      Follow us