UPDATED : அக் 11, 2026 11:28 PM
ADDED : அக் 11, 2026 08:58 PM

புதுடில்லி: ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பான 'யுனிசெப்' இந்தியா பிரிவின் துாதராக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 30. தற்போது, 'யுனிசெப்' அமைப்பின் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, உடல் நலன், அவர்களுக்கான வாய்ப்புகளை பெற்று தருவதில் உதவுவார்.
இது பற்றி மந்தனா கூறுகையில்,''இதை கவுரவமாக கருதுகிறேன். மனஉறுதியுடன் போராடினால், வாழ்வில் சாதிக்கலாம் என்பதை கிரிக்கெட் கற்றுக் கொடுத்தது. ஒவ்வொரு குழந்தையும் பெரிய கனவு காணவும், அதற்கான வாய்ப்பை பெறவும் தகுதியானவர்கள்,''என்றார்.
தெற்கு ஆசியாவுக்கான 'யுனிசெப்' தூதராக உள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் வெளியிட்ட செய்தியில்,'மந்தனாவை 'யுனிசெப்' குடும்பத்திற்கு வரவேற்கிறேன். குழந்தைகள் உரிமைக்கான சிறந்த குரலாக திகழ்வார்,'என குறிப்பிட்டுள்ளார்.
