இந்தியா 'ஏ' ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது ஆஸி.,
இந்தியா 'ஏ' ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது ஆஸி.,
UPDATED : அக் 11, 2026 10:23 PM
ADDED : அக் 11, 2026 08:36 PM

புதுச்சேரி: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 'ஏ' அணி 49 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 'ஏ' அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா 'ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி வென்றது. புதுச்சேரியில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்தியா 'ஏ' அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (49), பிரப்சிம்ரன் சிங் (39), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (33) நம்பிக்கை அளித்தனர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் (66), விப்ராஜ் நிகாம் (40) கைகொடுக்க, இந்தியா 'ஏ' அணி 47.3 ஓவரில் 275 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு ஜோஷ் பிலிப் (56) நல்ல துவக்கம் தந்தார். லியாம் ஸ்காட் (26), லாக்லான் ஷா (31), நாதன் மெக்ஸ்வீனி (39), நிகில் சவுத்ரி (29), மிட்செல் ஓவன் (20) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி 46.2 ஓவரில் 226 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இந்தியா 'ஏ' சார்பில் குர்ஜப்னீத் சிங் 3, யாஷ் தாகூர், நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
