தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆஸி., அணி அபாரம்

ஆஸி., அணி அபாரம்

ஆஸி., அணி அபாரம்


UPDATED : அக் 11, 2026 09:36 PM

ADDED : அக் 11, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 09:36 PM ADDED : அக் 11, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டர்பன்: டர்பன் டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 284 ரன் எடுத்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி , மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 390 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 27/1 ரன் எடுத்திருந்தது.

நேற்று, மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு மார்கரம் (37), டேவிட் பெடிங்ஹாம் (49) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் டெம்பா பவுமா (3) ஏமாற்றினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (32), வியான் முல்டர் (30), மார்கோ யான்சென் (26), கேஷவ் மஹாராஜ் (34) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. சைமன் ஹார்மர் (35) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3, ஸ்டார்க், ஹேசல்வுட், லியான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணி 106 ரன் முன்னிலை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us