/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐதராபாத் அணி ரன் குவிப்பு: புச்சி பாபு பைனலில்
/
ஐதராபாத் அணி ரன் குவிப்பு: புச்சி பாபு பைனலில்
ADDED : செப் 09, 2024 11:34 PM

நத்தம்: புச்சி பாபு பைனலில் ரோகித் ராயுடு சதம் விளாச ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 417 ரன் குவித்தது.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், புச்சி பாபு தொடர் நடக்கிறது. திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் பைனலில் ஐதராபாத், சத்தீஸ்கர் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் ஐதராபாத் அணி 288/6 ரன் எடுத்திருந்தது. ரோகித் ராயுடு (74) அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ரோகித் ராயுடு (155) கைகொடுக்க, ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 417 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சத்தீஸ்கர் சார்பில் ககன்தீப் சிங், ஷசாங்க் திவாரி, ஜீவேஷ், வாசுதேவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய சத்தீஸ்கர் அணி, ஆட்டநேர முடிவில் 145/8 ரன் எடுத்திருந்தது. ஆயுஷ் பாண்டே (36), ககன்தீப் சிங் (33*) ஆறுதல் தந்தனர். ஐதராபாத் சார்பில் தனய் தியாகராஜன், அனிகேத் ரெட்டி தலா 3, ரோகித் ராயுடு 2 விக்கெட் சாய்த்தனர்.