/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.சி., விருது: மந்தனா தேர்வு
/
ஐ.சி.சி., விருது: மந்தனா தேர்வு
ADDED : அக் 16, 2025 09:43 PM

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா தேர்வாகினர்.
சர்வதேச போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.
கடந்த செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுருக்கு இந்தியாவின் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வேயின் பிரையன் பென்னட் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த வீரராக அபிஷேக் தேர்வானார். கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் குவித்து (314 ரன், சராசரி 44.85, 'ஸ்டிரைக் ரேட்' 200.00) தொடர் நாயகன் விருது வென்றார் அபிஷேக்.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்ரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் மந்தனா, சிறந்த வீராங்கனையாக தேர்வானார். கடந்த மாதம் விளையாடிய 4 ஒருநாள் போட்டியில், 2 சதம் உட்பட 308 ரன் குவித்தார் (சராசரி 77.00, 'ஸ்டிரைக் ரேட்' 135.68) மந்தனா.