தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜோ ரூட் மீண்டும் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

ஜோ ரூட் மீண்டும் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

ஜோ ரூட் மீண்டும் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்


UPDATED : டிச 18, 2024 09:54 PM

ADDED : டிச 18, 2024 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2024 09:54 PM ADDED : டிச 18, 2024 12:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட், மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட், 895 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், நியூசிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் அரைசதம் (54) கடந்தார். இப்போட்டியின் இரு இன்னிங்சிலும் ஏமாற்றிய மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் (0, 1 ரன்), 876 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்தியாவின் ஜெய்ஸ்வால் (811 புள்ளி), ரிஷாப் பன்ட் (724) முறையே 4, 9வது இடத்தில் நீடிக்கின்றனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (890 புள்ளி) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (797) 5வது இடத்தில் தொடர்கிறார். இவர், 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் 3வது இடத்தை (283 புள்ளி) தக்கவைத்துக் கொண்டார். இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (415) முதலிடத்தில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us