/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' பவுலர்கள் திணறல்: இங்கிலாந்து லயன்ஸ் அணி பதிலடி
/
இந்தியா 'ஏ' பவுலர்கள் திணறல்: இங்கிலாந்து லயன்ஸ் அணி பதிலடி
இந்தியா 'ஏ' பவுலர்கள் திணறல்: இங்கிலாந்து லயன்ஸ் அணி பதிலடி
இந்தியா 'ஏ' பவுலர்கள் திணறல்: இங்கிலாந்து லயன்ஸ் அணி பதிலடி
ADDED : ஜூன் 01, 2025 11:50 PM

கேன்டர்பரி: முதல் டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி பவுலர்கள் ஏமாற்றினர். முகேஷ் 3 விக்கெட் சாய்த்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கேன்டர்பரியில் நடக்கிறது. இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 557 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 237/2 ரன் எடுத்திருந்தது. ஹைன்ஸ் (103), ஹோல்டன் (64) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியின் மேக்ஸ் ஹோல்டன் சதம் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 181 ரன் சேர்த்த போது முகேஷ் குமார் 'வேகத்தில்' ஹோல்டன் (101) வெளியேறினார். தொடர்ந்து அசத்திய முகேஷ் பந்தில் கேப்டன் ஜேம்ஸ் ரேவ் (8), ரேஹன் அகமது (3) அவுட்டாகினர். அபாரமாக ஆடிய டான் மவுஸ்லி, தன்பங்கிற்கு சதம் விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது ஹைன்ஸ் (171) அவுட்டானார். மவுஸ்லி 113 ரன் எடுத்தார்.
ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 527/7 ரன் எடுத்திருந்தது. ஜமான் அக்தர் (38) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'ஏ' சார்பில் முகேஷ் 3 விக்கெட் கைப்பற்றினார்.