தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ': தேவ்தத் படிக்கல், சுதர்சன் அரைசதம்

முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ': தேவ்தத் படிக்கல், சுதர்சன் அரைசதம்

முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ': தேவ்தத் படிக்கல், சுதர்சன் அரைசதம்


UPDATED : நவ 02, 2024 03:53 PM

ADDED : நவ 01, 2024 07:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2024 03:53 PM ADDED : நவ 01, 2024 07:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கே: தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்தியா 'ஏ' அணி முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (4 நாள் போட்டி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், மக்கே நகரில் நடக்கிறது. இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 107 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 99/4 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் நாதன் மெக்வீனி (39), கூப்பர் கோனோலி (37) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'ஏ' சார்பில் முகேஷ் குமார் 6, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் சாய்த்தனர்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (5), அபிமன்யு ஈஸ்வரன் (12) ஏமாற்றினர். பின் இணைந்த சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தனர். ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 208 ரன் எடுத்து, 120 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சுதர்சன் (96), படிக்கல் (80) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us