/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: 107 ரன்னுக்கு சுருண்டது
/
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: 107 ரன்னுக்கு சுருண்டது
ADDED : அக் 31, 2024 06:48 PM

மக்காய்: முதல் டெஸ்டில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டி கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (நான்கு நாள் ஆட்டம்) ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் விளையாடுகிறது. மக்காய் நகரில் முதல் டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்தியா 'ஏ' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (7), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (0) ஏமாற்றினர். சாய் சுதர்சன் (21), தேவ்தத் படிக்கல் (36) நிலைக்கவில்லை. பாபா இந்திரஜித் (9), இஷான் கிஷான் (4), நிதிஷ் குமார் ரெட்டி (0), மானவ் சுதார் (1) சோபிக்கவில்லை. நவ்தீப் சைனி (23) ஆறுதல் தந்தார். இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா 'ஏ' சார்பில் பிரண்டன் டோகெட் 6 விக்கெட் சாய்த்தார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு பியூ வெப்ஸ்டர் (33) கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி 99/4 ரன் எடுத்திருந்தது. கேப்டன் நாதன் மெக்வீனி (29), கூப்பர் கோனோலி (14) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.