தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா 'ஏ' அணி 'டிரா'

இந்தியா 'ஏ' அணி 'டிரா'

இந்தியா 'ஏ' அணி 'டிரா'


ADDED : ஜூன் 02, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேன்டர்பரி: இந்தியா 'ஏ', இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (நான்கு நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கேன்டர்பரியில் நடந்தது.

இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 557 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 527/7 ரன் எடுத்திருந்தது. ஜமான் அக்தர் (38) அவுட்டாகாமல் இருந்தார்.

நான்காம் நாள் ஆட்டத்தில் ஷர்துல் தாகூர் 'வேகத்தில்' ஜமான் அக்தர் (41) வெளியேறினார். நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் எடி ஜாக் (25) அவுட்டானார். ஹர்ஷித் ராணா பந்தில் ஜோஷ் ஹல் (2) போல்டானார். இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 587 ரன் எடுத்து, 30 ரன் முன்னிலை பெற்றது. இந்தியா 'ஏ' சார்பில் முகேஷ் குமார் 3, ஷர்துல் 2 விக்கெட் சாய்த்தனர்.

நல்ல துவக்கம்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (64), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (68) நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரெல் தன்பங்கிற்கு அரைசதம் விளாசினர்.

இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 241 ரன் எடுத்து, 211 ரன் முன்னிலையில் இருந்த போது, இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. நிதிஷ் குமார் (52), துருவ் ஜூரெல் (53) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us