/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' அசத்தல் வெற்றி: 67 ரன்னில் சுருண்டது நமீபியா
/
இந்தியா 'ஏ' அசத்தல் வெற்றி: 67 ரன்னில் சுருண்டது நமீபியா
இந்தியா 'ஏ' அசத்தல் வெற்றி: 67 ரன்னில் சுருண்டது நமீபியா
இந்தியா 'ஏ' அசத்தல் வெற்றி: 67 ரன்னில் சுருண்டது நமீபியா
ADDED : பிப் 06, 2026 11:04 PM

பெங்களூரு: 'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் அசத்திய இந்தியா 'ஏ' அணி 130 ரன்னில் வெற்றி பெற்றது. நமீபிய அணி 67 ரன்னுக்கு சுருண்டது.
பெங்களூருவில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 'ஏ', நமீபியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்தியா 'ஏ' அணி கேப்டன் ஆயுஷ் படோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்தியா 'ஏ' அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (5), உர்வில் படேல் (14) சோபிக்கவில்லை. பின் இணைந்த நமன் திர், ரியான் பராக் ஜோடி நம்பிக்கை தந்தது. பெர்னார்ட் ஷோல்ட்ஸ் வீசிய 10வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்ட ரியான் பராக், 25 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்த போது எராஸ்மஸ் பந்தில் ரியான் பராக் (69 ரன், 39 பந்து, 6x6, 5x4) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய எராஸ்மஸ் 'சுழலில்' நமன் திர் (39) சிக்கினார்.
கேப்டன் ஆயுஷ் படோனி (4), விப்ராஜ் நிகாம் (4), ரவி பிஷ்னோய் (5) ஏமாற்றினர். அஷுதோஷ் சர்மா (35) ஓரளவு கைகொடுத்தார். இந்தியா 'ஏ' அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்தது. அசோக் சர்மா (9) அவுட்டாகாமல் இருந்தார். நமீபியா சார்பில் ரூபன், ஹெய்ங்கோ, எராஸ்மஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய நமீபியா அணி 12.1 ஓவரில், 67 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. டிலன் லீச்சர் (22), ஜான் பிரைலிங்க் (12) ஆறுதல் தந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் குர்ஜப்னீத் சிங், மயங்க் யாதவ், அசோக் சர்மா, விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

