/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் அபாரம்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது
/
இந்திய பெண்கள் அபாரம்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது
இந்திய பெண்கள் அபாரம்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது
இந்திய பெண்கள் அபாரம்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது
UPDATED : அக் 06, 2024 07:07 PM
ADDED : அக் 05, 2024 11:09 PM

துபாய்: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு நிடா தர் (28), முனீபா அலி (17) ஆறுதல் தந்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி 3, ஸ்ரேயங்கா பாட்டீல் 2, தீப்தி சர்மா, ஆஷா சோபனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (7) ஏமாற்றினார். ஷபாலி வர்மா (32), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (23), கேப்டன் ஹர்மன்பிரீத் (29) கைகொடுத்தனர். இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா. இந்தியாவின் அருந்ததி, ஆட்ட நாயகி விருது வென்றார்.