/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை 'சுழலில்' சிக்கியது இந்தியா: ரோகித் விளாசல் வீண்
/
இலங்கை 'சுழலில்' சிக்கியது இந்தியா: ரோகித் விளாசல் வீண்
இலங்கை 'சுழலில்' சிக்கியது இந்தியா: ரோகித் விளாசல் வீண்
இலங்கை 'சுழலில்' சிக்கியது இந்தியா: ரோகித் விளாசல் வீண்
ADDED : ஆக 05, 2024 12:11 AM

கொழும்பு: இரண்டாவது ஒருநாள் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவால் டை' ஆனது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.
வாஷிங்டன் வலை: இலங்கை அணி துவக்கத்தில் திணறியது. சிராஜ் வீசிய முதல் ஓவரில் நிசங்கா (0) அவுட்டானார். பின் அவிஷ்கா பெர்ணான்டோ (40), குசால் மெண்டிஸ் (30) கைகொடுத்தனர். இருவரும் வாஷிங்டன் சுந்தர் 'சுழலில்' சிக்கினர். கேப்டன் சரித் அசலங்காவும் (25), வாஷிங்டன் வலையில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் வெல்லாலகே (39), கமிந்து மெண்டிஸ் (40) அசத்தினர். இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3, குல்தீப் 2 விக்கெட் வீழ்த்தினர்
ரோகித் அரைசதம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் வலுவான துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கமிந்து மெண்டிஸ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், 29 பந்தில் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்த நிலையில், ஜெப்ரி வாண்டர்சே 'சுழலில்' ரோகித்(64) அவுட்டானார். சிறிது நேரத்தில் சுப்மன் கில்(35) வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைப்பதை கணிக்க தவறினர். பொறுப்பற்ற முறையில் விளையாடினர்.
வாண்டர்சே 6 விக்கெட்: தொடர்ந்து மிரட்டிய 'லெக் ஸ்பின்னர்' வாண்டர்சே, இந்திய அணியின் 'மிடில் ஆர்டரை' தகர்த்தார். இவரது பந்துவீச்சில் ஷிவம் துபே (0), கோலி (14), ஸ்ரேயாஸ் (7), லோகேஷ் ராகுல் (0) அவுட்டாகினர். இந்திய அணி 24 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து தவித்தது. கடைசி கட்டத்தில் போராடிய அக்சர் படேல், 44 ரன்னுக்கு அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. வாஷிங்டன் சுந்தர் 15 ரன் எடுத்தார். 'டெயிலெண்டர்கள்' ஏமாற்ற, இந்திய அணி 42.2 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. அபார வெற்றி பெற்ற
இலங்கை அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 'சுழலில்' அசத்திய இலங்கையின் ஜெப்ரி வாண்டர்சே 6, அசலங்கா 3 விக்கெட் வீழ்த்தினர்.