தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணியில் யார்...யார் * ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய அணியில் யார்...யார் * ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய அணியில் யார்...யார் * ரசிகர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 30, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஜூன் 1-29ல் நடக்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடாவுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு இன்று ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.

கேப்டனாக ரோகித் சர்மா தொடர உள்ளார். மும்பை அணிக்காக பெரியளவில் சாதிக்காத 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவை (9 போட்டி, 197 ரன், 4 விக்.,) அணியில் சேர்ப்பது குறித்து அதிகம் விவாதிக்கப்படலாம்.

விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் 11 போட்டியில் 3 அரைசதம் உட்பட 398 ரன் எடுத்துள்ளார்.

வருவாரா ராகுல்

இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்துக்கு லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன் இடையே போட்டி காணப்படுகிறது. 17வது சீசனில் இதுவரை ராகுல் 378, சாம்சன் 385 ரன் எடுத்துள்ளனர். இருப்பினும் ராகுலிடம் 'டி-20' போட்டிக்கு ஏற்ற வேகம் குறைவாக காணப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் இவர் 5 அல்லது 6வது இடத்துக்கு பொருத்தமாக இருப்பார்.

ஐ.பி.எல்., தொடரில் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார் சாம்சன். ஆனால் இந்திய பேட்டிங் வரிசையில் 'நம்பர்-3' இடம் கோலிக்கு சொந்தம். இது, இவருக்கு பின்னடைவு.

திலக் வாய்ப்பு

மற்றபடி ஜிதேஷ் சர்மா இடம் பெறுவது சந்தேகம். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், விக்கெட் கீப்பிங் செய்யாத துருவ் ஜுரல் இடம் பெறுவது உறுதியில்லை.

இடது கை பேட்டரான திலக் வர்மாவின், 'ஆப் ஸ்பின்' திறமை அணியில் இடம் பெற கைகொடுக்கும். பும்ரா இடம் பெறுவது உறுதி. இவருடன் சந்தீப் சர்மா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us