sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்தியா-எமிரேட்ஸ் மோதல்: ஜூனியர் ஆசிய கோப்பையில்

/

இந்தியா-எமிரேட்ஸ் மோதல்: ஜூனியர் ஆசிய கோப்பையில்

இந்தியா-எமிரேட்ஸ் மோதல்: ஜூனியர் ஆசிய கோப்பையில்

இந்தியா-எமிரேட்ஸ் மோதல்: ஜூனியர் ஆசிய கோப்பையில்


ADDED : டிச 11, 2025 10:57 PM

Google News

ADDED : டிச 11, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஜூனியர் ஆசிய கோப்பை (19 வயது) கிரிக்கெட்டில் இந்தியா, எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 12வது சீசன் இன்று துவங்குகிறது. இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், இலங்கை உட்பட மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (டிச. 19) முன்னேறும். பைனல், டிச. 21ல் துபாயில் நடக்கவுள்ளது.

இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இன்று யு.ஏ.இ., அணியை சந்திக்கிறது. பேட்டிங்கில், கேப்டன் ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சையது முஷ்தாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடிய ஆயுஷ், 6 போட்டியில், 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 325 ரன் (சராசரி 108.33, 'ஸ்டிரைக் ரேட்' 166.66) குவித்தார். பீஹார் அணிக்காக விளையாடிய சூர்யவன்ஷி, சையது முஷ்தாக் அலி டிராபியில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற வரலாறு படைத்தார். ஆறு போட்டியில், ஒரு சதம் உட்பட 197 ரன் ('ஸ்டிரைக் ரேட்' 168.37) எடுத்தார். இவர்களது 'பார்ம்' தொடர்ந்தால் ரன் மழை பொழியலாம்.

இதுவரை சாம்பியன்

ஆசிய கோப்பை (19 வயது) வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் இந்தியா (8) முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் வங்கதேசம் (2) உள்ளது.






      Dinamalar
      Follow us