தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா-இங்கிலாந்து மோதல்: டெஸ்ட் அட்டவணை அறிவிப்பு

இந்தியா-இங்கிலாந்து மோதல்: டெஸ்ட் அட்டவணை அறிவிப்பு

இந்தியா-இங்கிலாந்து மோதல்: டெஸ்ட் அட்டவணை அறிவிப்பு


ADDED : ஆக 22, 2024 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியானது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 4வது சீசன் (2025-2027) அடுத்த ஆண்டு ஆரம்பமாகிறது. இதன் ஒருபகுதியாக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) வெளியிட்டது. முதல் டெஸ்ட், 2025, ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2-6), லண்டன், லார்ட்ஸ் (ஜூலை 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), லண்டன், ஓவலில் (ஜூலை 31 - ஆக. 4) நடக்கவுள்ளன.

கடைசியாக 2021-22ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்திருந்தது.

லார்ட்சில் முதன்முறை: இந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் தொடருக்கான அட்டவணையை இ.சி.பி., அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய பெண்கள் அணி, ஐந்து 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 'டி-20' போட்டி நாட்டிங்காமில் ஜூன் 28ல் நடக்கும். மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்டோல் (ஜூலை 1), லண்டன், ஓவல் (ஜூலை 4), மான்செஸ்டர் (ஜூலை 9), பர்மிங்காமில் (ஜூலை 12) நடக்கவுள்ளன.

மூன்று ஒருநாள் போட்டிகள் சவுத்தாம்ப்டன் (ஜூலை 16), லண்டன், லார்ட்ஸ் (ஜூலை 19), செஸ்டர்-லி-ஸ்டிரீட்டில் (ஜூலை 22) நடத்தப்படும். அதன்பின் 2026ல் இங்கிலாந்து செல்லும் இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுகிறது. இப்போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதன்மூலம் இவ்விரு அணிகள் இங்கு முதன்முறையாக டெஸ்டில் மோத உள்ளன.

இந்திய பெண்கள் அணி, இங்கிலாந்து மண்ணில் இதுவரை 9 டெஸ்டில் விளையாடி உள்ளது. இதில் 2ல் வெற்றி பெற்ற இந்தியா, 7 போட்டியை 'டிரா' செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us