தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தோல்விக்கு காரணம்: கேப்டன் ரோகித் விளக்கம்

தோல்விக்கு காரணம்: கேப்டன் ரோகித் விளக்கம்

தோல்விக்கு காரணம்: கேப்டன் ரோகித் விளக்கம்


UPDATED : டிச 08, 2024 11:11 PM

ADDED : டிச 07, 2024 10:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2024 11:11 PM ADDED : டிச 07, 2024 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரோகித் பரிதாபம்

நியூசிலாந்துக்கு எதிராக 3, அடிலெய்டில் 1 என தொடர்ந்து நான்கு டெஸ்டில் தோல்வியை சந்தித்தார் ரோகித் சர்மா (2024). தொடர்ந்து அதிக தோல்வியை சந்தித்த இந்திய கேப்டன்களில் மூன்றாவது இடத்தை தத்தா கெய்க்வாட் (1959), தோனி (2011, 2014) கோலி (2020-21) உடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் தலா நான்கு டெஸ்டில் தோல்வியை சந்தித்தனர். முதல் இரு இடங்களில் பட்டோடி (6 தோல்வி, 1967-68,) சச்சின் (5 தோல்வி, 1999-2000) உள்ளனர்.

எடுபடாத 'பேட்டிங்'

இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற அதிக ரன் எடுப்பது அவசியம். அடிலெய்டு டெஸ்டில் இந்திய பேட்டிங் எடுபடாதது ஏமாற்றம் அளித்தது. முதல் இன்னிங்சில் 30-40 ரன் குறைவாக எடுத்தோம். பும்ரா இரு முனைகளிலும் பந்துவீச முடியாது. மற்ற பவுலர்களும் பொறுப்பாக செயல்பட வேண்டும். ஷமியின் முழங்காலில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. நுாறு சதவீத உடற்தகுதி பெற்றால் மட்டுமே, 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார்,''என்றார்.

சோகமான நாள்

சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று இந்தியாவுக்கு சோகமான நாளாக அமைந்தது. அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் தோல்வியடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. துபாயில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை பைனலில் இந்திய அணி, வங்கதேசத்திடம் தோற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us