/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா: பெண்கள் ஒருநாள் போட்டியில்
/
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா: பெண்கள் ஒருநாள் போட்டியில்
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா: பெண்கள் ஒருநாள் போட்டியில்
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா: பெண்கள் ஒருநாள் போட்டியில்
ADDED : டிச 08, 2024 09:38 PM

பிரிஸ்பேன்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 122 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. பிரிஸ்பேனில் 2வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு போப் லிட்ச்பீல்ட் (60) நல்ல துவக்கம் கொடுத்தார். ஜார்ஜியா (101), எல்லிஸ் பெர்ரி (105) சதம் விளாசினர். பெத் மூனி (56), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 371 ரன் குவித்தது. கேப்டன் தஹ்லியா மெக்ராத் (20) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் சைமா தாகூர் 3, மின்னு மணி 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (9), ஹர்லீன் தியோல் (12), தீப்தி சர்மா (10) ஏமாற்றினர். ரிச்சா கோஷ் (54), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (38), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (43) ஓரளவு கைகொடுத்தனர். இந்திய அணி 44.5 ஓவரில் 249 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. மின்னு மணி (46) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அனாபெல் 4 விக்கெட் சாய்த்தார்.
ஆட்ட நாயகி விருதை ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி வென்றார்.