தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


UPDATED : ஜன 18, 2026 11:30 PM

ADDED : ஜன 17, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2026 11:30 PM ADDED : ஜன 17, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நைஜீரியா 3வது இடம்

காசாபிளாங்கா: மொராக்கோவில், ஆப்ரிக்க கோப்பை கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. இதன் 3-4வது இடத்துக்கான போட்டியில் நைஜீரியா, எகிப்து அணிகள் மோதின. கூடுதல் நேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய நைஜீரியா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடத்தை கைப்பற்றியது.

இத்தாலி அணி கலக்கல்

பெல்கிரேடு: செர்பியாவில், ஐரோப்பிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் 37வது சீசன் நடக்கிறது. பிரதான சுற்று போட்டியில் இத்தாலி, ஜார்ஜியா அணிகள் மோதின. இத்தாலி அணி 16-14 என வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் கிரீஸ் அணி 20-8 என, துருக்கியை வீழ்த்தியது. குரோஷிய அணி 17-9 என ருமேனியாவை தோற்கடித்தது.

ஸ்பெயின் அணி அபாரம்

ஹெர்னிங்: டென்மார்க், நார்வே, சுவீடனில், ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 17வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 30-25 என, ஆஸ்திரியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜெர்மனி அணி 27-30 என, செர்பியாவிடம் தோல்வியடைந்தது. இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி முதலிடத்தில் உள்ளது.

எக்ஸ்டிராஸ்

* மும்பை மாரத்தான் ஓட்டத்தின் ஆண்கள், பெண்கள் பிரிவில் முறையே இந்தியாவின் கார்த்திக் கர்கேரா (2 மணி நேரம், 19 நிமிடம், 55 வினாடி), சஞ்ஜீவனி ஜாதவ் (2 மணி நேரம், 49 நிமிடம், 02 வினாடி) முதலிடம் பிடித்தனர்.

* சிங்கப்பூர் பாட்மின்டன் சங்கத்தின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் இந்திய வீரர் அனுப் ஸ்ரீதர் 42, விலகினார். இவர், டிசம்பர் 2024ல் பயிற்சியாளராக இணைந்தார்.

* குவைத்தில் நடக்கும் ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 21-43 என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

* தாய்லாந்தில் நடக்கும் தெற்காசிய புட்சல் கால்பந்து (ஐவர்) சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

* கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ், 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 0-3 என, மக்காவோவின் ஜு யுலிங்கிடம் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us