UPDATED : செப் 22, 2026 11:27 PM
ADDED : செப் 21, 2026 11:08 PM

புதுச்சேரி: அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் முதல் நாளில் இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 257/5 ரன் எடுத்திருந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா 4 நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய 'ஏ' அணி கேப்டன் தேவ்தத் படிக்கல், பேட்டிங் தேர்வு செய்தார்.
சுதர்சன் நம்பிக்கை
இந்திய 'ஏ' அணிக்கு சாய் சுதர்சன், அமன் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. அமன் (6) பெர்கஸ் 'வேகத்தில்' வீழ்ந்தார். தேவ்தத் 3 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ரஷீத் (16), யாஷ் ரத்தோட் (1) நிலைக்கவில்லை. மறுபக்கம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 57 ரன் எடுத்து திரும்பினார்.
இந்திய 'ஏ' அணி 97/5 ரன் எடுத்து திணறியது. அடுத்து இணைந்த குமார் குஷாக்ரா, தனுஷ் கொடியன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணி சரிவில் இருந்து மீண்டது. இந்நிலையில் 82 ரன் எடுத்த குஷாக்ரா, 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். முதல் நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 257/5 ரன் எடுத்திருந்தது. தனுஷ் (68), ஷம்ஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியா 'ஏ' சார்பில் கோரே அதிகபட்சம் 3 விக்கெட் கைப்பற்றினார்.
