sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோப்பை வென்றது இந்தியா: 'யூத்' டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி

/

கோப்பை வென்றது இந்தியா: 'யூத்' டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி

கோப்பை வென்றது இந்தியா: 'யூத்' டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி

கோப்பை வென்றது இந்தியா: 'யூத்' டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி


ADDED : அக் 09, 2024 11:06 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'யூத்' டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ், 120 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் (19 வயதுக்குட்பட்ட) மோதிய, அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது 'யூத்' டெஸ்ட் சென்னையில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 492 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 142/3 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஆலிவர் பீக் (117) சதம் கடந்தார். அலெக்ஸ் லீ யங் (66) அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 277 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் முகமது ஏனான், அன்மோல்ஜீத் சிங் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

பின், 'பாலோ-ஆன்' பெற்று 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சைமன் பட்ஜ் (26), ஸ்டீவன் ஹோகன் (29) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 95 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 120 ரன்னில் வெற்றி பெற்று, 2-0 என தொடரை கைப்பற்றி, கோப்பை வசப்படுத்தியது.

இந்தியா சார்பில் அன்மோல்ஜீத் சிங் 5, முகமது ஏனான் 3 விக்கெட் கைப்பற்றினர். இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் சாய்த்த அறிமுக சுழற்பந்துவீச்சாளர் அன்மோல்ஜீத் சிங், ஆட்ட நாயகன் விருது வென்றார்.






      Dinamalar
      Follow us