sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோப்பை வென்றது இந்தியா: மழையால் 5வது போட்டி ரத்து

/

கோப்பை வென்றது இந்தியா: மழையால் 5வது போட்டி ரத்து

கோப்பை வென்றது இந்தியா: மழையால் 5வது போட்டி ரத்து

கோப்பை வென்றது இந்தியா: மழையால் 5வது போட்டி ரத்து


ADDED : நவ 08, 2025 04:54 PM

Google News

ADDED : நவ 08, 2025 04:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5வது 'டி-20' போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்திய அணி தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது, கடைசி 'டி-20' போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்திய அணி 4.5 ஓவரில், 52/0 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

தொடர் நாயகன் விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா (163 ரன்) கைப்பற்றினார்.






      Dinamalar
      Follow us