/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'டி-20' உலக கோப்பை: ஆமதாபாத்தில் பைனல்
/
'டி-20' உலக கோப்பை: ஆமதாபாத்தில் பைனல்
ADDED : நவ 06, 2025 09:43 PM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை (2026) பைனல், ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.
இந்தியா, இலங்கையில், அடுத்த ஆண்டு (பிப்ரவரி-மார்ச்) 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. இத்தொடர் பிப். 7ல் துவங்கி, மார்ச் 8ல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.
மொத்தம் 20 அணிகள், 55 போட்டியில் பங்கேற்கின்றன. இதற்கான மைதானங்களை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறுதி செய்துள்ளது. இதன்படி ஆமதாபாத், டில்லி, கோல்கட்டா, சென்னை, மும்பையில் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பைனல், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கு முன் இங்கு, 2023ல் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை (50 ஓவர்) பைனல் நடந்தது.
இலங்கையில், கண்டி, கொழும்பு உள்ளிட்ட 3 இடங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

