/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * தென் ஆப்ரிக்க தொடருக்காக...
/
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * தென் ஆப்ரிக்க தொடருக்காக...
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * தென் ஆப்ரிக்க தொடருக்காக...
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * தென் ஆப்ரிக்க தொடருக்காக...
ADDED : மே 31, 2024 10:50 PM

புதுடில்லி: தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள், 'டி-20' போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி ஜூன் 16ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஜூன் 19, 23ல் நடக்கும்.
அதன்பின் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28-ஜூலை 2ல் நடக்கும் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. அடுத்து ஜூலை 5, 7, 9ல் 'டி-20' போட்டியில் பங்கேற்கின்றன. இதற்கான மூன்று வித இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தொடர்கிறார். கடைசியாக 2023 ஜூலை மாதம் போட்டியில் பங்கேற்ற பிரியா புனியா, ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.
காயம் காரணமாக சமீபத்திய போட்டிகளில் பங்கேற்காத ஜெமிமா, மூன்றுவித அணியில் இடம் பெற்றுள்ளார். அனுபவ விக்கெட் கீப்பர் பேட்டர் யஸ்திகா நீக்கப்பட்டு, இளம் அறிமுக வீராங்கனையாக உமா செத்ரி சேர்க்கப்பட்டார்.
ஒருநாள் அணி
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி, தீப்தி, ஜெமிமா, ரிச்சா, உமா, ஹேமலதா, ராதா, ஆஷா ஷோபனா, ஸ்ரேயான்கா, சைகா, பூஜா, ரேணுகா, அருந்ததி, பிரியா.
தவிர, டெஸ்ட் அணியில் சுபா, ஸ்னே, ராஜேஸ்வரி, மேக்னா, 'டி-20' அணியில் சஜனா, அமன்ஜோத் கவுர் கூடுதலாக இடம் பிடித்துள்ளனர்.