தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய பெண்கள் ஏமாற்றம் * ஆஸி., மீண்டும் வெற்றி

இந்திய பெண்கள் ஏமாற்றம் * ஆஸி., மீண்டும் வெற்றி

இந்திய பெண்கள் ஏமாற்றம் * ஆஸி., மீண்டும் வெற்றி


ADDED : ஆக 14, 2024 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்காய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் 'ஏ' அணி 4 விக்கெட்டில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் 'ஏ' அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி நேற்று மக்காயில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது.

ராகவி நம்பிக்கை

இந்திய 'ஏ' அணிக்கு ஷ்வேதா (1), பிரியா (6) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சுபா (16) நிலைக்கவில்லை. பின் தேஜல், ராகவி இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். இந்நிலையில் தேஜல் (53) அவுட்டாக, கேப்டன் மின்னு மானி, 27 ரன் எடுத்து கிளம்பினார்.

மறுபக்கம் ராகவி 82 ரன் எடுத்து திரும்பினார். பின் வரிசையில் சயாலி (9), மேக்னா (0) கைவிட்டனர். இந்திய 'ஏ' அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது. ஷிப்ரி (25) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியாவின் மைத்லன், 4 விக்கெட் சாய்த்தார்.

கேட்டி சதம்

ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு கேட்டி, மேடி (27) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சார்லி (26) ரன் அவுட்டானார். கேட்டி சதம் விளாச, கேப்டன் தஹ்லியா அரைசதம் விளாச, ஆஸ்திரேலியா வெற்றியை எளிதாக நெருங்கியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த போது தஹ்லியா (56), கேட்டி (129), நிகோல் (1), டெஸ் (5) என சீரான இடைவெளியில் வீழ்ந்த போதும், இந்தியா வெற்றி பெற முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணி 47 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. இந்தியாவின் மேக்னா, மின்னு மானி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us