/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பவுலிங் பயிற்சியாளர் * தாயகம் திரும்பியது ஏன்...
/
இந்திய பவுலிங் பயிற்சியாளர் * தாயகம் திரும்பியது ஏன்...
இந்திய பவுலிங் பயிற்சியாளர் * தாயகம் திரும்பியது ஏன்...
இந்திய பவுலிங் பயிற்சியாளர் * தாயகம் திரும்பியது ஏன்...
ADDED : பிப் 18, 2025 11:24 PM

துபாய்: இந்திய பவுலிங் பயிற்சியாளர் மார்கல், தாயகம் திரும்பினார்.
இந்திய அணி பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் லீக் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளைய முதல் போட்டியில், வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தால் விலகிய நிலையில், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா என மூன்று பவுலர்களை நம்பி, இந்தியா களமிறங்குகிறது. பவுலிங் பயிற்சியாளராக, முதல், தென் ஆப்ரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கல் 40, உள்ளார்.
இதனிடையே மார்கல், குடும்ப அவசர சூழ்நிலை காரணமாக திடீரென தென் ஆப்ரிக்கா திரும்பினார். இவர் எப்போது துபாய் திரும்புவார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அணியினர், பவுலிங் பயிற்சியாளர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.