sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சரிந்தது இந்திய 'பேட்டிங்': 6 விக்கெட் வீழ்த்தினார் ஸ்டார்க்

/

சரிந்தது இந்திய 'பேட்டிங்': 6 விக்கெட் வீழ்த்தினார் ஸ்டார்க்

சரிந்தது இந்திய 'பேட்டிங்': 6 விக்கெட் வீழ்த்தினார் ஸ்டார்க்

சரிந்தது இந்திய 'பேட்டிங்': 6 விக்கெட் வீழ்த்தினார் ஸ்டார்க்


ADDED : டிச 06, 2024 11:02 PM

Google News

ADDED : டிச 06, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் ஸ்டார்க் 'வேகத்தில்' அதிர்ந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 180 ரன் மட்டும் எடுத்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்தியா, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. நேற்று, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு ஆட்டம்) துவங்கியது.

அஷ்வின் வாய்ப்பு: இந்திய 'லெவன்' அணியில் தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சுப்மன் கில், ரோகித் சர்மா, அஷ்வின் தேர்வாகினர். ஆஸ்திரேலிய 'லெவன்' அணியில் ஹேசல்வுட் நீக்கப்பட்டு ஸ்காட் போலந்து இடம் பிடித்தார். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஸ்டார்க் அசத்தல்: இந்தியாவுக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி. ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் (0) அவுட்டானார். பின் லோகேஷ் ராகுல், சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது ஸ்டார்க் 'வேகத்தில்' ராகுல் (37) வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டார்க் பந்தில் விராத் கோலி (7) அவுட்டானார். சுப்மன் கில் (31) ஆறுதல் தந்தார். கேப்டன் ரோகித் (3) ஏமாற்றினார்.

ரிஷாப் பன்ட் (21), அஷ்வின் (22) நிலைக்கவில்லை. ஹர்ஷித் ராணா, பும்ரா 'டக்-அவுட்' ஆகினர். ஸ்டார்க் பந்தை சிக்சருக்கு அனுப்பிய நிதிஷ் குமார் ரெட்டி, போலந்து வீசிய 42வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச 21 ரன் கிடைத்தன. தனிநபராக அசத்திய நிதிஷ் 54 பந்தில், 42 ரன் எடுத்து கைகொடுக்க, இந்திய அணி கவுரவமான ஸ்கோரை பெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட் சாய்த்தார்.

பவுலிங்கில் தடுமாற்றம்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. நேற்று தனது 31வது பிறந்த நாள் கொண்டாடிய பும்ரா 'வேகத்தில்' கவாஜா (13) வெளியேறினார். பின் இணைந்த மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுசேன் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன் எடுத்திருந்தது. 94 ரன் பின்தங்கியிருந்தது. மெக்ஸ்வீனி (38), லபுசேன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

கருப்பு பட்டை

கடந்த 2014ல் அடிலெய்டில் நடந்த ஷெபீல்டு ஷீல்டு போட்டியில், தலையில் பந்து தாக்கியதில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ரெட்பாத் 83, உடல்நலக் குறைவால் காலமானார். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணியினர் நேற்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

36,225 ரசிகர்கள்

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தை காண அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கு 36,225 ரசிகர்கள் வந்தது சாதனை. இதற்கு முன், 2011-12 தொடரில் இங்கு நடந்த போட்டியை காண 35,081 பேர் வந்திருந்தனர்.

கபில்தேவ் வழியில் பும்ரா

ஆஸ்திரேலியாவின் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா, டெஸ்ட் அரங்கில் ஒரு ஆண்டில் 50 விக்கெட் கைப்பற்றிய 3வது இந்திய வேகப்பந்துவீச்சாளரானார். நடப்பு ஆண்டில் பும்ரா, 11 டெஸ்டில், 50 விக்கெட் சாய்த்துள்ளார். ஏற்கனவே கபில்தேவ் (1983ல் 75 விக்கெட்-18 டெஸ்ட், 1979ல் 74 விக்கெட்-17 டெஸ்ட்), ஜாகிர் கான் (2002ல் 51 விக்கெட், 15 டெஸ்ட்) இப்படி விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டாவது வீரர்

ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் அவுட்டானார். டெஸ்ட் அரங்கில் ஒரு போட்டியின் முதல் பந்தில் அதிக முறை (3) விக்கெட் வீழ்த்திய பவுலர் பட்டியலில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் பெட்ரோ கோலின்சுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்டார்க். ஏற்கனவே ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் இலங்கையின் திமுத் கருணாரத்னே, இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தனர். பெட்ரோ கோலின்ஸ், மூன்று முறை வங்கதேசத்தின் ஹன்னன் சர்க்காரை முதல் பந்தில் அவுட்டாக்கினார்.

ஏழாவது வீரர்

டெஸ்ட் அரங்கில், போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்த 7வது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். ஏற்கனவே இந்தியாவின் சுனில் கவாஸ்கர், சுதிர் நாயக், டபிள்யு.வி. ராமன், ஷிவ் சுந்தர் தாஸ், வாசிம் ஜாபர், லோகேஷ் ராகுல் இப்படி அவுட்டாகினர்.

சிறந்த பந்துவீச்சு

'வேகத்தில்' மிரட்டிய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை (6/48) பதிவு செய்தார். இதற்கு முன் 2016ல் காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 6 விக்கெட்டுக்கு, 50 ரன் விட்டுக்கொடுத்தது இவரது சிறந்த செயல்பாடாக இருந்தது.

முதன்முறை

டெஸ்ட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் (6) சாய்த்தார் ஸ்டார்க். இதற்கு முன், 2020ல் நடந்த அடிலெய்டு டெஸ்டில் (எதிர்: இந்தியா) 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

நான்கு முறை

பகலிரவு டெஸ்டில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த பவுலரானார் ஸ்டார்க். இதுவரை 4 முறை இப்படி சாதித்திருந்தார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட், பாகிஸ்தானின் யாஷிர் ஷா, நியூசிலாந்தின் பவுல்ட், இந்தியாவின் அக்சர் படேல் தலா 2 முறை இப்படி விக்கெட் வீழ்த்தினர்.

முதல் வேகப்பந்துவீச்சாளர்

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 50 விக்கெட் கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளரானார், 3வது பவுலரானார் ஸ்டார்க். இதுவரை 10 டெஸ்டில், 53 விக்கெட் சாய்த்துள்ளார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலிய 'சுழல்' வீரர்களான லியான் (63 விக்கெட், 14 டெஸ்ட்), ஷேன் வார்ன் (56 விக்கெட், 13 விக்கெட்) உள்ளனர்.

70 விக்கெட்

பகலிரவு டெஸ்டில் 70 விக்கெட் சாய்த்த முதல் பவுலரானார் ஸ்டார்க். இதுவரை 13 டெஸ்டில், 72 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியாவின் லியான் (43 விக்கெட், 13 டெஸ்ட்), ஹேசல்வுட் (37 விக்கெட், 8 டெஸ்ட்) உள்ளனர். இந்தியா சார்பில் அஷ்வின், அதிகபட்சமாக 18 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

சொந்த மண் சாதகம்

சொந்த மண்ணில் மூன்று வித போட்டியில் சேர்த்து 350 விக்கெட் சாய்த்த 4வது ஆஸ்திரேலிய வீரரானார் ஸ்டார்க். இதுவரை டெஸ்டில் 226 (52 போட்டி), ஒருநாள் அரங்கில் 102 (55 போட்டி), சர்வதேச 'டி-20'ல் 24 (20 போட்டி) என 352 விக்கெட் (127 போட்டி) கைப்பற்றி உள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் வார்ன் (453 விக்கெட், 153 போட்டி), மெக்ராத் (449 விக்கெட், 161 போட்டி), பிரட் லீ (360 விக்கெட், 142 போட்டி) சொந்த மண்ணில் சாதித்தனர்.

111 ரன்னுக்கு 9 விக்.,

இந்திய அணி ஒருகட்டத்தில் 69/1 ரன் எடுத்திருந்தது. அடுத்த 111 ரன்னுக்கு, மீதமுள்ள 9 விக்கெட்டை பறிகொடுத்து, முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு சுருண்டது.

ஒரே நாளில் 11 விக்.,

இந்திய அணி ஒருகட்டத்தில் 82/4 என தவித்தது. அடுத்த 6 விக்கெட்டுகளை 98 ரன்னுக்கு இழந்தது. முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் பறிகொடுக்க, நேற்று ஒரே நாளில் 11 விக்கெட் சரிந்தன.






      Dinamalar
      Follow us