/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் வெற்றி: முதல் 'டி-20' போட்டியில்
/
இந்திய பெண்கள் வெற்றி: முதல் 'டி-20' போட்டியில்
ADDED : ஏப் 28, 2024 11:54 PM

சில்ஹெட்: முதல் 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. சில்ஹெட்டில் முதல் போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (9) ஏமாற்றினார். ஷபாலி வர்மா (31), யாஸ்திகா பாட்யா (36), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (30), ரிச்சா கோஷ் (23) நம்பிக்கை தந்தனர். சஜீவன் சஞ்சனா (11), பூஜா (4) சோபிக்கவில்லை. இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்தது.
ரேணுகா அசத்தல்
சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு ரேணுகா சிங் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' திலாரா (4), சோபனா (6) வெளியேறினர். முர்ஷிதா (13), பஹிமா (1), ஷோர்னா (11) சோபிக்கவில்லை. தொடர்ந்து மிரட்டிய ரேணுகா பந்தில் ரபேயா கான் (2) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் நிகர் சுல்தானா (51) அரைசதம் கடந்தார்.
வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 101 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 3, பூஜா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகி விருதை ரேணுகா வென்றார்.

