/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
/
இந்திய பெண்கள் ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
இந்திய பெண்கள் ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
இந்திய பெண்கள் ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
ADDED : ஆக 25, 2024 11:03 PM

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 45 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், இந்தியா 'ஏ', ஆஸ்திரேலியா 'ஏ' பெண்கள் அணிகள் மோதிய ஒரே ஒரு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, இந்தியா 184 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 260 ரன் எடுத்தது. பின், 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3ம் நாள் முடிவில் 149/6 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஏழாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது உமா செத்ரி (47) அவுட்டானார். ராகவி பிஸ்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மன்னத் காஷ்யப் (1), சயாலி (21) நிலைக்கவில்லை. இந்திய அணி 2வது இன்னிங்சில் 243 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் டெஸ் பிளிண்டாப், சார்லி நாட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.