தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய பெண்கள் அணி அபாரம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

இந்திய பெண்கள் அணி அபாரம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

இந்திய பெண்கள் அணி அபாரம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது


ADDED : டிச 15, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவி மும்பை: முதல் 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 49 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டி-20' போட்டி நவி மும்பையில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, உமா செத்ரி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த போது உமா (24) அவுட்டானார். பின் இணைந்த மந்தனா(54), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(73) அரைசதம் கடந்தனர். ரிச்சா கோஷ் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (13), சஜீவன் சஜனா (1) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரிஷ்மா ராம்ஹரக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலி மேத்யூஸ் (1) ஏமாற்றினார். கியானா ஜோசப் (49), டீன்டிரா டாட்டின் (52) கைகொடுத்தனர். ஷெமைன் (13), சினெல்லே (7), அபி பிளட்சர் (0) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஷபிகா (15), மாண்டி மங்ரு (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் டைட்டாஸ் சாது 3, தீப்தி சர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us