/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் அணி தோல்வி: பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம்
/
இந்திய பெண்கள் அணி தோல்வி: பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம்
இந்திய பெண்கள் அணி தோல்வி: பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம்
இந்திய பெண்கள் அணி தோல்வி: பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம்
ADDED : ஆக 24, 2025 10:54 PM

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றிய இந்தியா 'ஏ' பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்ற இந்தியா 'ஏ' பெண்கள் அணி, ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் நான்கு நாள் போட்டி கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் விளையாடியது. பிரிஸ்பேனில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 299, ஆஸ்திரேலியா 'ஏ' 305 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி, 2வது இன்னிங்சில் 260/8 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஜோஷிதா (9), சைமா (6) ஏமாற்றினர். இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 286 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. திதாஸ் (22) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா 'ஏ' சார்பில் ஆமி எட்கர் 5 விக்கெட் சாய்த்தார்.
பின், 281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு கேப்டன் தஹ்லியா வில்சன் (46) நல்ல துவக்கம் கொடுத்தார். ராச்செல் (64), மேடி (68), அனிகா (72) அரைசதம் கடந்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 283/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா 'ஏ' சார்பில் சைமா 2 விக்கெட் வீழ்த்தினார்.