/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பிரதிகா அரைசதம் விளாசல்
/
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பிரதிகா அரைசதம் விளாசல்
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பிரதிகா அரைசதம் விளாசல்
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பிரதிகா அரைசதம் விளாசல்
ADDED : ஏப் 27, 2025 08:09 PM

கொழும்பு: பிரதிகா ராவல் அரைசதம் விளாச, இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கின்றன. கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மழையால் தலா 39 ஓவர் கொண்ட போட்டியாக நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி (7) ஏமாற்றினார். ஹாசினி (30), கவிஷா (25), அனுஷ்கா (22) ஓரளவு கைகொடுத்தனர். இலங்கை அணி 38.1 ஓவரில், 147 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் ஸ்னே ராணா 3 விக்கெட் சாய்த்தார்.
நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மந்தனா (43) அசத்தினார். பிரதிகா, 62 பந்தில் அரைசதம் எட்டினார். இனோகா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்லீன் தியோல் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 29.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரதிகா (50 ரன், 6 பவுண்டரி), ஹர்லீன் (48 ரன், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி விருதை பிரதிகா வென்றார்.