/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய தொடர்: வார்னர் விருப்பம்
/
இந்திய தொடர்: வார்னர் விருப்பம்
ADDED : அக் 22, 2024 11:16 PM

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, ஓய்வு பெற்ற வார்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா செல்வுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.
இதுகுறித்து, இந்த ஆண்டு துவக்கத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் டேவிட் வார்னர் 37, கூறியது.
ஒரு அலைபேசி அழைப்பு போதும், ஆஸ்திரேலிய அணிக்காக எப்போதும் விளையாடத் தயாராக உள்ளேன். உண்மையில், கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பின், இதுவரை, ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு டெஸ்டில் தான் பங்கேற்றுள்ளனர். இதனால் நானும் உங்களைப் போன்று தான் தயாராகி வருகிறேன்.
ஒருவேளை எனது பங்களிப்பு அணிக்கு தேவை என்றால், அடுத்த ஷெபீல்டு (முதல் தரம்) போட்டியில் மகிழ்ச்சியுடன் விளையாடுவேன். சரியான காரணங்களுக்காக ஓய்வு பெற்றேன். தற்போது சிறப்பாக 'பினிஷிங்' செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.