/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'பாக்சிங் டே' டெஸ்ட்: டிக்கெட் காலி
/
'பாக்சிங் டே' டெஸ்ட்: டிக்கெட் காலி
ADDED : டிச 10, 2024 11:25 PM

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி முதல் நாள் டிக்கெட்டுகள் காலியாகின.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்தது. இதைக் காண, மூன்று நாளில் மொத்தம் 1,35,012 பேர் திரண்டனர். முன்னதாக 2014-15ல் இங்கு, 5 நாள் நடந்த டெஸ்ட் போட்டியை 1,13,009 பேர் பார்த்தது தான் அதிகமாக இருந்தது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனால் அடுத்தடுத்த போட்டியை காண, டிக்கெட் கிடைப்பது சிரமமாக உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் டிச. 14-18ல் நடக்க உள்ளது.
அடுத்து நான்காவது டெஸ்ட், கிறிஸ்துமஸ் முடிந்த மறுநாள் 'பாக்சிங் டே' போட்டியாக டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட செய்தியில்,' நான்காவது, 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி, ரசிகர்களுக்கான முதல் நாள் டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்தன,' என தெரிவித்துள்ளது.