/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பகலிரவு டெஸ்ட்: இந்தியா 180 ரன்
/
பகலிரவு டெஸ்ட்: இந்தியா 180 ரன்
UPDATED : டிச 06, 2024 03:36 PM
ADDED : டிச 05, 2024 10:56 PM

அடிலெய்டு: இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 180 ரன் எடுத்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (0) ஏமாற்றினார். பின் இணைந்த லோகேஷ் ராகுல் (37), சுப்மன் கில் (31) ஓரளவு கைகொடுத்தனர். விராத் கோலி (7), கேப்டன் ரோகித் சர்மா (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ரிஷாப் பன்ட் (21), அஷ்வின் (22) நிலைக்கவில்லை. நிதிஷ் குமார் ரெட்டி (42) நம்பிக்கை தந்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சிராஜ் (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட் சாய்த்தார்.