/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தனியாக சென்ற ஜெய்ஸ்வால் * பிரிஸ்பேனில் இந்திய அணியினர்
/
தனியாக சென்ற ஜெய்ஸ்வால் * பிரிஸ்பேனில் இந்திய அணியினர்
தனியாக சென்ற ஜெய்ஸ்வால் * பிரிஸ்பேனில் இந்திய அணியினர்
தனியாக சென்ற ஜெய்ஸ்வால் * பிரிஸ்பேனில் இந்திய அணியினர்
ADDED : டிச 11, 2024 10:48 PM

பிரிஸ்பேன்: இந்திய அணி வீரர்கள் பேருந்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால், தனியாக காரில் சென்றார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தோற்றது. தொடர் தற்போது 1--1 என சமநிலையில் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் வரும் 14ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. இதற்காக அடிலெய்டில் பயிற்சி மேற்கொண்ட இந்திய அணியினர், நேற்று காலை 10:05 மணி விமானத்தில் பிரிஸ்பேன் செல்ல இருந்தனர். இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் காலை 8:20 மணிக்கு, பேருந்தில் ஏறிவிட்டனர். துவக்க வீரர் ஜெய்ஸ்வால் மட்டும் வரவில்லை.
சற்று நேரம் பொறுமையாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா, பேருந்தை விட்டு இறங்கினார். அருகில் இருந்த இந்திய அணி மானேஜர், அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசினார். சில நிமிடத்துக்குப் பின் மீண்டும் ரோகித் பேருந்தில் ஏறினார். ஜெய்ஸ்வால் இல்லாமல் இந்திய அணியினர் கிளம்பிச் சென்றனர். 8:50 மணிக்கு அடிலெய்டு விமான நிலையம் சென்றனர்.
காரில் கிளம்பினார்
சிறிது நேரத்துக்குப் பின் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார் ஜெய்ஸ்வால். பேருந்து கிளம்பிச் சென்றதை அடுத்து, அங்கிருந்த காரில் கிளம்பிச் சென்று, இந்திய அணி வீரர்களுடன் இணைந்து கொண்டார்.
தகர்ந்த 'காபா' கோட்டை
பிரிஸ்பேன் 'காபா' மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக திகழ்கிறது. இந்தியா 7 டெஸ்டில் பங்கேற்றது. முதல் 6ல் தோற்றது. கடைசியாக 2021ல் இங்கு நடந்த டெஸ்டில் இந்திய அணி (336, 329/7), ஆஸ்திரேலியாவை (369, 294) 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுப்மன் கில் (7, 91), ரிஷாப் பன்ட் (23, 89), வாஷிங்டன் சுந்தர் (62, 22), ஷர்துல் தாகூர் (67, 2) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இம்மைதானத்தில் 1988க்குப் பின் முதன் முறையாக ஆஸ்திரேலியா தோற்றது.
அடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது. இதனால் இங்கு நடக்க உள்ள மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஆடுகளம் எப்படி
பிரிஸ்பேன் ஆடுகள பராமரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறுகையில்,'' வழக்கமான முறையில் ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாகவும், பந்துகள் எகிறி வரும் வகையில் உள்ளது. அதேநேரம் பேட்டர்களும் திறமை வெளிப்படுத்த முடியும்,'' என்றார்.