/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம் * ஆஸி., பவுலர்கள் திணறல்
/
ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம் * ஆஸி., பவுலர்கள் திணறல்
ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம் * ஆஸி., பவுலர்கள் திணறல்
ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம் * ஆஸி., பவுலர்கள் திணறல்
UPDATED : நவ 23, 2024 03:29 PM
ADDED : நவ 22, 2024 10:58 PM

பெர்த்: பெர்த் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால், ராகுல் அரைசதம் அடித்தனர். இந்திய அணி வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது. 'வேகத்தில்' மிரட்டிய பும்ரா, ஐந்து விக்கெட் சாய்த்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்று களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்து, 83 ரன் பின்தங்கி இருந்தது.
பும்ரா ஐந்து
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் பந்தை வீசிய பும்ரா, அலெக்ஸ் கேரியை (21) அவுட்டாக்கினார். அடுத்த சில நிமிடத்தில் ஹர்ஷித் ராணா பந்தில் லியான் (5) வெளியேறினார். ஆஸ்திரேலியா 79/9 என திணறியது. பின் இணைந்த ஸ்டார்க், ஹேசல்வுட் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணி ஒரு வழியாக 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் மீண்டும் மிரட்டிய ஹர்ஷித், ஸ்டார்க்கை (26) அவுட்டாக்க, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பும்ரா 5, ஹர்ஷித் 3, சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
நல்ல துவக்கம்
முதல் இன்னிங்சில் பெற்ற 46 ரன் முன்னிலையுடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி இம்முறை சுதாரித்துக் கொண்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 172 ரன் எடுத்து, 218 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ராகுல் (62), ஜெய்ஸ்வால் (90) அவுட்டாகாமல் இருந்தனர்.