sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பும்ரா 'வேகத்தை' சமாளிப்பது எப்படி... * கில்கிறிஸ்ட் 'அட்வைஸ்'

/

பும்ரா 'வேகத்தை' சமாளிப்பது எப்படி... * கில்கிறிஸ்ட் 'அட்வைஸ்'

பும்ரா 'வேகத்தை' சமாளிப்பது எப்படி... * கில்கிறிஸ்ட் 'அட்வைஸ்'

பும்ரா 'வேகத்தை' சமாளிப்பது எப்படி... * கில்கிறிஸ்ட் 'அட்வைஸ்'


ADDED : டிச 03, 2024 11:25 PM

Google News

ADDED : டிச 03, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிலெய்டு: ''ஆஸ்திரேலிய பேட்டர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடினால், பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்களை சமாளிக்கலாம்,'' என கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இதில் மிரட்டிய இந்திய 'வேகப்புயல்' பும்ரா 8 விக்கெட் (5+3) கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் 'டாப்-8' பேட்டரில், மிட்சல் மார்ஷ் மட்டுமே இவரிடம் தப்பினார். முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் (0), இரண்டாவது இன்னிங்சில் லபுசேன் (3) என இரு முக்கிய வீரர்களை வெளியேற்றினார். அடுத்து அடிலெய்டில் நடக்க உள்ள பகலிரவு டெஸ்டிலும் (டிச.6-10, பிங்க் பால்) அசத்த காத்திருக்கிறார்.

லபுசேன் நம்பிக்கை

இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கூறுகையில்,''ஆஸ்திரேலிய பேட்டர்கள் களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடினால், பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்களை சமாளிக்கலாம். ஒரு இன்னிங்சில் சராசரியாக 50 பந்துகளை சந்தித்தால், சரியான பாதையில் பயணிப்பதாக கருதலாம். லபுசேனுக்கு அதிக பொறுப்பு உண்டு. தொடர்ந்து அதிக பந்துகளை சந்திக்க முயற்சிக்க வேண்டும். ரன் எடுக்க முடியாமல் தவிக்கிறார். இவர் தரமான வீரர் என்பதை நினைவுபடுத்த வேண்டும். தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது. தான் மேற்கொண்ட பயிற்சியின் மீது நம்பிக்கை வைத்து, வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்,''என்றார்.

'பிங்க் பால்' ராசி

தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கூறுகையில்,''கடந்த சில ஆண்டுகளாக பும்ரா சிறப்பாக பந்துவீசுகிறார். எங்களது பேட்டர்களும் உலகத் தரம் வாய்ந்தவர்கள். பும்ரா பந்துவீச்சை சமாளிப்பதற்கான யுக்தியை கண்டறிவர்.

பெர்த் டெஸ்ட் தோல்வி பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து எங்களது பாணியில் விளையாடுவோம். 'பிங்க் பால்' டெஸ்டில் ஆஸ்திரேலியா நுாறு சதவீத வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்டிலும் சாதிக்க முயற்சிப்போம். இங்கு 2020ல் இந்திய அணியை 36 ரன்னுக்கு ஆல் அவுட்டாக்கினோம். இதே போல மீண்டும் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்த முறை புதிய திட்டத்துடன் களமிறங்க உள்ளோம். அணியில் எவ்வித விரிசலும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்,''என்றார்.

ஸ்மித் காயம்

அடிலெய்டில் நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது லபுசேன் வீசிய பந்து, ஸ்டீவ் ஸ்மித்தின் வலது கை விரல் பகுதியில் தாக்கியது. வலியால் அவதிப்பட்ட இவருக்கு 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார். இவரது காயத்தின் தன்மை பற்றி தெரியவில்லை. இதே போல பவுலிங் பயிற்சியாளர் வெட்டோரி வீசிய பந்து தாக்கியதில் லபுசேன் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பிய இவர், பேட்டிங் பயிற்சியை தொடர்ந்தார்.

பயிற்சியில் ரோகித்

அடிலெய்டில் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் நீண்ட நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, முகேஷ் குமார் (ரிசர்வ் வீரர்) பவுலிங் பயிற்சி மேற்கொண்டனர். முகேஷ் வீசிய பந்தில் கோலி தடுமாறினார். கடந்த போட்டியில் பங்கேற்காத ரோகித், கவனமாக ஆடினார். இந்திய வீரர்களின் பயிற்சியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர்.






      Dinamalar
      Follow us