/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸி., அணியில் 'டீன் ஏஜ்' வீரர்
/
ஆஸி., அணியில் 'டீன் ஏஜ்' வீரர்
ADDED : டிச 20, 2024 11:03 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியில் 'டீன் ஏஜ்' வீரரான சாம் கொன்ஸ்டால் 19, சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், 'பாக்சிங் டே' போட்டியாக டிசம்பர் 26ல் மெல்போர்னில் துவங்குகிறது.
இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி, முதல் மூன்று டெஸ்டில் பங்கேற்ற நாதன் மெக்ஸ்வீனி 25, நீக்கப்பட்டார். இவர் 6 இன்னிங்சில் 4 முறை பும்ரா 'வேகத்தில்' அவுட்டானார். தவிர ஒரு முறை மட்டும் அதிகபட்சம் 39 ரன் (10, 0, 39, 10, 9, 4) ரன் எடுத்தார்.
இவருக்குப் பதில் இளம் துவக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ், அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ஹேசல்வுட் காயத்தால் வெளியேறிய நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஜேய் ரிச்சர்ட்சன், 3 ஆண்டுக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். எனினும் மெல்போர்ன் டெஸ்டில் ஸ்காட் போலந்து களமிறங்கலாம்.
* அணி விபரம்
கம்மின்ஸ் (கேப்டன்), கவாஜா, கொன்ஸ்டாஸ், லபுசேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, இங்லிஸ், சீன் அபாட், வெப்ஸ்டெர், லியான், மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலந்து, ரிச்சர்ட்சன்.