/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா இமாலய வெற்றி * 6 விக்கெட் சாய்த்தார் அஷ்வின் * 280 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது
/
இந்தியா இமாலய வெற்றி * 6 விக்கெட் சாய்த்தார் அஷ்வின் * 280 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது
இந்தியா இமாலய வெற்றி * 6 விக்கெட் சாய்த்தார் அஷ்வின் * 280 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது
இந்தியா இமாலய வெற்றி * 6 விக்கெட் சாய்த்தார் அஷ்வின் * 280 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது
UPDATED : செப் 22, 2024 11:32 AM
ADDED : செப் 21, 2024 11:14 PM

சென்னை: சென்னை டெஸ்டில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அஷ்வின் 6 விக்கெட் சாய்த்தார். இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 376, வங்கதேசம் 149 ரன் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது இன்னிங்சில் 515 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, மூன்றாவது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்திருந்தது. ஷாண்டோ (51), சாகிப் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.அஷ்வின் அசத்தல்இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரில் ஜடேஜா பந்தை சுழற்றினார். ஷாண்டோ, சாகிப் இருவரும் முதல் ஒரு மணி நேரம் தாக்குப் பிடித்தனர். பின் அஷ்வினை அழைத்தார் ரோகித் சர்மா. இதற்கு உடனே பலன் கிடைத்தது. முதலில் சாகிப்பை (25) வெளியேற்றினார் அஷ்வின். மறுபக்கம் லிட்டன் தாசை (1) அவுட்டாக்கினார் ஜடேஜா. மீண்டும் மிரட்டிய அஷ்வின், மெஹிதி ஹசன் மிராஸ் (8), டஸ்கின் அகமதுவை (5) அவுட்டாக்கினார். கேப்டன் ஷாண்டோ 82 ரன் எடுத்து ஜடேஜா பந்தில் அவுட்டானார். கடைசியில் ஹசன் முகமது (7) திரும்ப, வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. அஷ்வின் 6, ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தனர். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், வரும் செப். 27 ல் கான்பூரில் துவங்குகிறது.
37 முறைசென்னை டெஸ்டில் 6 விக்கெட் சாய்த்தார் அஷ்வின். டெஸ்ட் அரங்கில் 5 அல்லது அதற்கும் மேல் என, இவர் 37 வது முறையாக வீழ்த்தி அசத்தினார். சொன்னேன். உண்மையில் பேட்டை பாதுகாப்பதே எனது இலக்காக இருந்தது,'' என்றார்.