தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோலி நெஞ்சில் இதோ இதோ... கோப்பை காதல் பிறந்ததோ * இன்று 'எலிமினேட்டர்' சவால்

கோலி நெஞ்சில் இதோ இதோ... கோப்பை காதல் பிறந்ததோ * இன்று 'எலிமினேட்டர்' சவால்

கோலி நெஞ்சில் இதோ இதோ... கோப்பை காதல் பிறந்ததோ * இன்று 'எலிமினேட்டர்' சவால்


ADDED : மே 21, 2024 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., 'எலிமினேட்டர்' போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியாது. தகுதிச் சுற்று-1ல் தோற்ற அணியுடன், தகுதிச் சுற்று-2ல் மோத வேண்டும். அதில் வென்றால் பைனல் வாய்ப்பை பெறலாம்.

தொடர்ந்து 6 வெற்றி

டுபிளசி தலைமையிலான பெங்களூரு அணி திடீரென எழுச்சி கண்டது. முதல் 8 போட்டியில் 7ல் தோற்றது. பின் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று, 'பிளே-ஆப்' வாய்ப்பை பெற்றது. 16 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி, முதல் கோப்பை வெல்லும் ஆசையில் உள்ளார். 14 போட்டிகளில் 708 ரன் குவித்து, முதலிடத்தில் நீடிப்பது பலம். நிலையான ஆட்டத்தை டுபிளசி தருகிறார். மேக்ஸ்வெல், ரஜத் படிதார் மிரட்டலாம். 'பினிஷிங்' பணிக்கு தினேஷ் கார்த்திக் உள்ளார்.

பந்துவீச்சில் யாஷ் தயாள் நம்பிக்கை தருகிறார். சென்னைக்கு எதிரான முக்கிய போட்டியில் கடைசி ஓவரை கச்சிதமாக வீசி வெற்றி தேடித் தந்தார். சிராஜ், சுவப்னில் சிங் கைகொடுக்கலாம்.

பவுலிங் பலம்

ராஜஸ்தான் அணி தொடரை வலுவாக துவக்கியது. போகப் போக தடுமாறியது. கடைசி நான்கு போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட, பதட்டத்துடன் காணப்படுகிறது. ஜோஸ் பட்லர் இல்லாதது பலவீனம். ஜெய்ஸ்வால் (348 ரன்), கேப்டன் சாம்சன் (504), ரியான் பராக் (531) அசத்தலாம். அதிரடிக்கு ஹெட்மெயர் உள்ளார். உலகின் பெரிய ஆமதாபாத் மோடி மைதானம், 'பேட்டிங்' சொர்க்கபுரி கிடையாது. இங்கு இம்முறை 12 இன்னிங்சில் இரு முறை மட்டுமே 200 ரன் எட்ட முடிந்தது. இது வலுவான பந்துவீச்சு படையுடன் களமிறங்கும் ராஜஸ்தானுக்கு சாதகம். பவுல்ட், அஷ்வின், சகால், சந்தீப் சர்மா என தரமான பவுலர்கள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us